Latest News

April 10, 2016

சிறையை உடைத்து தப்பிச்செல்ல ஏற்பாடு
by admin - 0

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் மன்னன் கோடீஸ்வரர் மொஹமட் சித்தீக் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு தீட்டிய திட்டம் புலனாய்வுத் துறையினரால் அம்பலத்துக்கு வந்துள்ளது.

சிறைச்சாலையின் சுவரை உடைத்து தப்பிச் செல்ல இவர் திட்டம் தீட்டியுள்ளார். இவரை அழைத்துச் செல்ல நவீன ரக கார் ஒன்றையும் பாதுகாப்புக்கு இரு மோட்டார் சைக்கிள்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மஹர சிறைச்சாலையிலிருந்த அதிகாரிகள் நான்கு பேரின் ஒத்துழைப்பை பெற்றிருந்ததாகவும் அறியவந்துள்ளது. இதற்கான குறித்த அதிகாரிகளுக்கு பாரியளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு தப்பிச் செல்லும் சித்தீக் வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டும் தயார் நிலையில் காணப்பட்டதாகவும் புலனாய்வுத் துறைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

'இந்த சித்தீக் என்பவர் ஏற்கனவே இந்தியாவில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும் போது, வைத்தியசாலைக்கு செல்லும் போர்வையில் சென்னை சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  
« PREV
NEXT »

No comments