புதிய அரசின் மீது வடக்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்காளான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசத்தை சந்தித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் இங்கு வந்து எமது நாட்டில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தென்னியலங்கையிலும், வடஇலங்கையிலும் எவ்;வாறான மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பது தொடர்பாக அறிவதற்கு வந்திருந்தனர்.
அந்தவகையில் வடக்கில் எவ்வாறானn செயற்பாடுகள் மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதுதொடர்பில் என்னிடம் வினவியிருந்தனர். நான் அவர்களிடம் சில விடயங்களை குறிப்பட்டிருந்தேன். அதாவது, வடபகுதி மக்கள் புதிய அரசில் நம்பிக்;கை வைத்திருந்தார்கள் ஆனால் அந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது.
புதிய அரசின் மீது வடபகுதி மக்களின் நம்பிக்கை குறைவதற்கான காரணம் வடபகுதி மக்கள் 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்துள்ளார்கள். பலாலி, ஊறனி, மயிலிட்டி, காங்கேசன்துறை, வசாவிளான் போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அவர்களை மீள் குடியேற்றுவதற்கு தற்போதுள்ள புதிய அரசு முயற்சி எடுத்து வருகின்ற போதிலும் அந்த முயற்சி போதுமானதாக இல்லை.
அடுத்ததாக சிறையில் இருக்கும் எமது அரசியல் கைதிகள் அனைவரது பெயர்கள் விபரங்களையும் அரசு வெளியிட வேண்டும். அவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும். காணாமல் போனவர்களின் விபரங்களை தெரிவித்து காணமற்போனவர்கள் இருக்கின்றார்களால் அல்லது இறந்து விட்டார்களா என்ற முடிவினை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவற்றை அறிவதில் மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
மேலும் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அதிகளவான உதவிகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மறுபடியும் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என அவர்களுக்கு தெரிவித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments
Post a Comment