11.4.2016 அன்று விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 13 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக 13 தொகுதிகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர். உச்சி வெய்யில் உக்கிரமாக அடிகும் 12 மணிக்கு கொண்டுவந்து அமர்த்தப்பட்ட மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். இதில், கூட்ட நெரிசல் வேறு. பல பெண்கள் மயங்கிசரிந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு பணிக்கு நின்றிந்த காவலர்களும் வெய்யிலின் உக்கிரத்தால் மயங்கிச்சரிந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனதோ தெரியவில்லை.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நெரிசலில் மூச்சுத்திணறி, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதுபோலவே கருணாகரன் என்பவரும் இறந்தார். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. உயிரிப்பலிகள் உயரும் என்ற அஞ்சப்படுகிறது.

No comments
Post a Comment