Latest News

April 12, 2016

வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': இந்தியாவில் தடை-அரசு பரிசீலனை
by admin - 0

வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த மாற்றங்கள் காரணமாக, இந்த செயலி மூலம் அனுப்பப்படும் செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர மற்ற யாரும் படிக்க முடியாது. . 

வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்திகளை, சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள், ஏன், நாங்கள் கூட பார்க்க முடியாது என வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்திய சட்டப்படி இணையதளம் சேவைகளை 40 பிட் என்கிரிப்சன் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்த வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசின் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்திய அரசின் அனுமதி பெற வேண்டுமானால், வாட்ஸ்ஆப் நிறுவனம், செயலியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். வாட்ஸ்ஆப் இதனை செய்யாது என்றே தெரிகிறது. மறைமுகமாக, அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments