Latest News

April 15, 2016

தேசிய மட்டச் சதுரங்கப் போட்டிக்குத் தெரிவானோருக்கு சான்றிதழ் வழங்கலும் பயிற்சி வழங்கலும்
by admin - 0

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கும், சான்றிதழ் பெற தகுதி பெற்றோருக்குமாக எண்பது வீர வீராங்கணைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் , அவர்களுக்கான பயிற்சி பட்டறையும் நாளை 16ம் திகதி சனிக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி போட்டியின் மாவட்ட மட்டத் தெரிவுப்போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் கடந்த 9ம், 10ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஐம்பத்து மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இருபத்தேழு பேர் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பயிற்சி வழங்கலும் நிகழ்வே நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இந் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளோருக்கான பதிவுகளும் இடம்பெற்றுள்ளதுடன் அதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து வீர வீராங்கனைகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார். தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக இலங்கை சதுரங்கச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments