இலங்கையில் இணைய தளங்கள் தடை செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இணைய தளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் சிங்கள இணைய தளமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளங்களை தடை செய்யும் திட்டங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இணைய தளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment