24 வயதான வித்யா இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரின் உயிரை காப்பாற்ற ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்கள் அவசரமாக தேவைப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் கொடையாளர்களை எதிர்பார்த்திருக்கும், வித்யா மிகவும் நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான வித்தியா அல்போன்ஸுக்கு, அவரது மரபணுக்களுடன் ஒத்துப் போகக் கூடிய குருத்தணுக்கள் அவசரமாக தேவைப்படுவதாக கூறும் மருத்துவர்கள் அதற்காக உலகளவில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பொருந்தக்கூடிய குருத்தணுவை அளிக்கும் கொடையாளியை பெறுவது, மிகக் கடினமாக உள்ளது எனக் கூறும் மருத்துவர்கள் தெரிவித்துளள்னர்.
இவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய கொடையாளிகள் அவரை தொடர்பு கொண்டு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில், வித்யாவின் ஒவ்வொரு மணித்துளிகளும் நகர்ந்து செல்கின்றன.
வித்யாவுக்கு மருத்துவ உதவி செய்ய விரும்புவோரை அடையாளம் காணும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது.
தானம் செய்ய விரும்புவோர் St Anselm's Catholic Church, The Green, Southall, UB2 4BE என்ற முகவரில் அமைந்துள்ள நிலையத்தில் நடைபெறும் பரிசோதனையில் பங்கேற்க முடியும். இன்று காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பரிசோதனை நடைபெறும்.
No comments
Post a Comment