பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா... குனிந்தது போதும்... நிமிர்ந்திடு தலைவா... தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி''... இது அழகிரிக்கோ, வேறு யாருக்கோ அடித்த போஸ்டர் அல்ல... பச்சப்புள்ள பன்னீர் செல்வத்தை உசுப்பேற்ற அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்தான் இப்படி வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சரவையிலும் முதல்வருக்கு அடுத்த இடம் இவருக்கு தான். அதனால்தான், ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்தபோதும் பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கினார்.அந்த அளவு நம்பிக்கைக்குரிய வராக இருந்த பன்னீர்செல்வம், சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் மீதான முதல்வரின் கோபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தேர்தலில் சீட் கேட்டு பலரும் பன்னீர்செல்வத்தை அணுகியதாக கூறப்படுகிறது.
பன்னீர் செல்வம் வாரிசுகள்
இந்த விவகாரத்தில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மகன்களின் செயல்பாடுகள் தொடர்பாக உளவுப்பிரிவினர் தகவல்களை சேகரித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், இதனையடுத்து அவரது ஆதரவாளர்களை படிப்படியாக கட்சியை விட்டு நீக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
No comments
Post a Comment