நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி பீமநகரில் இன்று நடந்தது. திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 268 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும்.
ஓட்டு வங்கி விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடையவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம். திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
தெலங்கானாவை தெலுங்கர்கள் ஆளும் போது தமிழர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என குரல் கொடுப்பதில் தவறில்லை. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றக்கூடாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற செயல்பாட்டு அறிக்கை வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும். சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தஞ்சை விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி செய்தது விளம்பரத்திற்கு என்றாலும் கூட அது பாராட்டத்தக்கது என சீமான் தெரிவித்தார்
No comments
Post a Comment