Latest News

March 28, 2016

தமிழ் ஊடகவியலாளர் படுகொலை விசாரணையில் பாரபட்சம் முதலமைச்சர் சி.வி. ஊடக அமைச்சரிடம் குற்றச்சாட்டு
by admin - 0

கொலை­செய்­யப்­பட்ட சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்ற போதும் படு­கொ­லை­செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் எந்த விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குற்றம் சாட்­டினார்.
தமிழ் ஊடகவியலாளர்...

வடக்குதெற்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் மக்­க­ளையும் ஒன்­றி­னைத்து நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முக­மாக ஊட­கத்­துறை அமைச்­சரின் தலை­மையில் தமிழ் சிங்­கள ஊட­க­வி­ய­லார்கள் நேற்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­தித்­தனர். இந்த சந்­திப்பில் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க, ஊடகப் பிர­தி­ய­மைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான ஆகியோர் சந்­தித்­தனர். இந்த சந்­திப்­பின்­போதே முத­லைச்சர் மேற்­கண்­ட­வாறு குற்­றச்­சாட்­டினார்.

அவர் மேலும் கூறு­கையில்,

சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை அர­சாங்கம் மேற்­கொள்­வதில் எம்­மத்­தியில் எந்த முடன்­பா­டு­களும் ஆட்­சே­ப­னையும் இல்லை. ஆனால் அர­சியல் ரீதியில் எந்த தீர்­மா­னத்­தையும் எட்­டாது இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது தமிழ் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­க­தாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சியல் பிரச்­சி­னைக்கும் தீர்வு காணப்­பட்ட பின்­னரே ஏனைய நல்­லி­ணக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் எனவும் அவர் அர­சாங்­கத்­திற்கு சுட்­டிக்­காட்­டினார்.
வடக்கு தெற்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஒன்­றி­ணைத்து நாட்டில் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் பல­ப­டுத்த வேண்டும் எனவும் அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும் என தெரி­விக்­கின்­றமை நல்ல விடயம். அதை நாம் வர­வேற்­கின்றோம். அதே வேளையில் எனது பக்க கருத்­து­க­ளையும் எண்­ணங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் கருத்­தில்­கொண்டும் செயற்­பட வேண்டும். குறிப்­பாக இது­வ­ரையில் நாற்­ப­தற்கும் அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.இவர்­களில் நான்கு பேர் மட்­டுமே சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள். மற்­றைய அனை­வரும் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள். கொல்­லப்­பட்ட சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களில் எனது நண்பன் லசந்த விக்­ர­ம­துங்க, பிரகீத் ஆகி­யோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.அவர்கள் தொடர்பில்
விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது நல்ல விடயம். அதேபோல் கொல்­லப்­பட்ட எமது தமிழ் ஊட­க­வி­ய­லார்கள் தொடர்பில் இன்னும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­தது எங்­க­ளுக்கு மன வருத்­தத்­தையும் வேத­னை­யையும் தரு­கின்­றது.
அது­மட்டும் அல்ல தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொன்­ற­வர்கள் யார் என மக்கள் பேசிக்­கொண்டு இருக்­கும்­போது, அவர்கள் இன்னும் உள்­நாட்டில் உள்­ளனர் என கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலையில் அவர்கள் தொடர்பில் சரி­யான முறையில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடி­யா­தது ஏன் என்ற விட­யமும் எமக்கு ஏமாற்­றத்தை தரு­கின்­றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்­துள்ளார் என்றும் அதன் விட­யங்கள் தொடர்பில் விப­ரங்­களை ஜனா­தி­ப­தியின் பிரதிச் செய­லா­ள­ரிடம் தெரி­வித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டனர். இந்த விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் அதை நாம் வர­வேற்­கின்றோம்.

அதேபோல் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை மேற்­கொள்­வதில் எம்­மத்­தியில் எந்த முடன்­பா­டு­களும் ஆட்­சே­ப­னையும் இல்லை. ஆனால் அர­சியல் ரீதியில் எந்த தீர்­மா­னத்­தையும் எட்­டாது இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது எந்­த­வித நன்­மை­யையும் தர­மு­டி­யாது. அவ்­வாறு செயற்­பட்டால் ஒரு அள­வுக்கு மேல் எந்தப் பய­னையும் உரு­வாக்­காது.

மிகவும் முக்­கி­ய­மாக எமது அர­சியல் பிணக்­கு­க­ளையும் பிரச்­சி­னை­யையும் தீர்க்க வேண்டும். அந்த பிரச்­சி­னை­களை தீர்க்­காது ஒன்­றி­ணைந்து இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது சாத்­தியம் இல்லை. காரணாம் மக்கள் எந்த நிலை­யிலும் தமது அர­சியல் தீர்வை எதிர்­பார்த்து வரு­கின்­றனர். குறிப்­பாக தென்­னா­பி­ரிக்­காவில் இவ்­வா­றான ஒரு நிலைமை ஏற்­பட்ட நிலை­மையில் அங்கு இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட்ட பின்­னரே ஏனைய நல்­லி­ணக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த நிலை­மைகள் முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் தான் உண்மை மற்றும் நல்­லி­ணக்க செயன்­மு­றை­களை உரு­வாக்­கி­னார்கள். ஆகவே இலங்­கை­யிலும் அவ்­வா­றான நிலை­மைகள் அவ­சி­ய­மா­னது.

எனினும் இங்கு நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மட்டும் உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் அதே நிலையில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்வும் எட்­டப்­படும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. அதை நான் வர­வேற்­கிறேன். உண்­மையில் அர­சாங்கம் அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் அர­சா­னகம் அதிக அக்­கறை காட்ட வேண்டும்.

அதேபோல் இப்போது வடக்கு தெற்கு மொழிப்பிரச்சினை என்ற ஒரு சிக்கலும் உள்ளது. வடக்கு சம்பந்தமாக வெளியிடும் கருத்துகள் தெற்கில் வேறு அர்த்தத்தில் அல்லது பக்கசார்பாக கொண்டுசெல்லப்படுகின்றது. அதேபோல் தெற்கின் கருத்துகளும் வடக்கில் தவறாக கருத்தில்கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிடுகின்றனர். இதனை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆகவே இந்த விடயங்களை தவிர்க்க இரு தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே வரும் காலத்தில் ஊடகவியலாளர்களின் மூலமாக அவர்களின் நல்லெண்ண செயற்பாடுகள் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படும் என நம்புகின்றேன்.
« PREV
NEXT »

No comments