Latest News

March 30, 2016

தற்கொலை அங்கி மீட்பு -மைத்திரியின் யாழ் விஜயம் பயம் காரணமாக ரத்து
by admin - 0

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகித்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜெட்விங்க் குழுமத்தின் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார். 

அத்துடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் ஒன்றின் திறப்பு விழாவிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார். 

இதற்காக முன்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். 

எனினும் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயங்களை ரத்துச் செய்யுமாறு பாதுகாப்புத் தரப்பு அறிவுறுத்தியுள்ளது. 

அதனை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் ஜனாதிபதியின் யாழ். மற்றும் வவுனியா விஜயங்களை ரத்துச் செய்து, அங்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

« PREV
NEXT »

No comments