சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்கொலை அங்கி, 4 கிளைமோர், 2 கிளைமோர் பற்றிரிகள், கைத்துப்பாக்கியின் ரவைகள் 100, சி - 4 வெடிமருந்துகள் 12 கிலோ என்பன மீட்கப்பட்டன. மேற்படி வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டைச் சுற்றி வளைத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இதனுடன் தொடர்புடைய வேறெந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தப்பியோடிய 31 வயதுடைய சந்தேகநபரை அக்கராயன் பகுதியில் வைத்து அக்கராயன் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/169148/%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.8jFW2k8i.dpuf
No comments
Post a Comment