Latest News

March 05, 2016

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்கப்படும்
by admin - 0

நாங்கள் நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­ளவும், உண்­மையை கண்­ட­றி­யவும் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­க­வுள்ளோம். அந்த வடி­வத்தை தயா­ரிப்­ப­தற்­காக தற்­போது கலந்­து­ரை­யா­டல்­களும், ஆலோ­ச­னை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­த­வ­கையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச கோட்­பா­டு­க­ளுக்­குட்­பட்ட சட்­ட­மொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

ஜெனி­வாவில் நடை­பெற்ற ஜன­நா­யக சமூகம் தொடர்­பான நிகழ்­வொன்றில் நேற்­று­முன்­தினம் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,
இலங்­கையில் ஜன­நா­யகம் என்­பது நீண்­ட­கா­ல­மாக பயங்­க­ர­வா­தி­களின் தனி­நாட்டு கிளர்ச்­சிகள் கார­ண­மாக அச்­சு­றுத்­த­லுக்­குட்­பட்டு காணப்­பட்­டது. அந்த பயங்­க­ர­வாதக் குழு­வினர் சிறு­வர்­களை தமது படையில் இணைத்­த­துடன், ஜன­நா­யகத் தலை­வர்­க­ளையும் கொலை செய்­தனர். ஜன­நா­ய­கத்தை சீர்­கு­லைத்­தனர். அதனால் தான் ஜன­நா­ய­கத்தில் அங்­கத்­துவம் வகிக்­காத பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தைக்­கூட நாங்கள் கொண்­டு­வர நேர்ந்­தது.
பயங்­க­ர­வாதம் முடி­வுக்கு வந்­ததும் மக்கள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க ஆரம்­பித்­தனர். 30 வரு­டங்­க­ளாக இலங்­கையை பயங்­க­ர­வாதம் ஆட்­கொண்­டது. இக் காலத்தில் பல்­வேறு அர­சாங்­கங்­களின் தலை­வர்கள் சர்­வ­தேச உத­வி­யுடன் பேச்­சு­வார்த்­தை­க­ளி­னூ­டாக தீர்­வுக்கு செல்ல முயற்­சித்­த­போதும் அந்த முயற்­சிகள் வெற்­றி­பெ­ற­வில்லை.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் ஜன­நா­யகம் மீண்டும் வலு­வ­டையும் என மக்கள் எதிர்­பார்த்­தனர். யுத்தம் முடிந்­ததும் நல்­லி­ணக்கம் முன்­னெ­டுக்­கப்­பட்டு யுத்­தத்­தினால் ஏற்­பட்ட காயங்­களை ஆற்றும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அப்­போது இருந்த அர­சாங்கம் யுத்த வெற்­றியைக் மிகப் பாரி­ய­ளவில் கொண்­டா­டி­யது.

ஜனா­தி­ப­தி­யாக இரண்டு தட­வை­களே பத­வி­வ­கிக்க முடியும் என்­ப­தற்­கான வரை­ய­றை­களை அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மூலம் அப்­போ­தைய அர­சாங்கம் நீக்­கி­யது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் செய­லி­ழக்க செய்­யப்­பட்­டன, கருத்து சுதந்­திரம் பறிக்­கப்­பட்­டது, செய்தி இணை­யத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டன. ஊட­க­வி­ய­ளா­லர்கள் அச்­சு­றுத்­தப்­பட்­டனர், சுயா­தீன நீதித்­துறை செய­லி­ழந்­தது, நட­மாடும் சுதந்­திரம் கட்­டுப்­பாட்­டுக்கு உட்­பட்­டது, மனித உரி­மைகள் மதிக்­கப்­ப­ட­வில்லை, குற்­றங்­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டாத நிலைமை நாட்டை ஆட்­கொண்­டது.
எவ்­வா­றெ­னினும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி நிலைமை மாற்­ற­ம­டைந்­தது. முழு உல­கத்­திற்கும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் ஆசி­யாவில் மிக பழைய நாடான இலங்­கையில் வன்­மு­றை­யற்ற ரீதியில் சர்­வா­தி­காரம் நீக்­கப்­பட்­டது. கற்கள், துப்­பாக்கி குண்­டு­க­ளுக்குப் பதி­லாக மக்கள் வாக்­குச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்தி மாற்­றத்தை கொண்டு வந்­தனர்.

இந்த வெற்­றிக்குப் பக்­க­ப­ல­மாக தேர்தல் ஆணை­யா­ளரும் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் இருந்­தனர். ஜன­வரி 8 ஆம் திகதி மட்­டு­மல்­லாது ஆகஸ்ட் 17 ஆம் திக­தியும் அந்த வெற்றி மீள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­படும் வகை­யிலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­படும் வகை­யிலும் அர­சி­ய­ல­மைப்பில் 19 ஆவது திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. இது இலங்­கையில் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யது. மிகவும் மதிக்­கத்­தக்க மூத்த அர­சி­யல்­வா­தி­யான இரா.சம்­பந்தன் எதிர்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

அதிஷ்­ட­வ­ச­மாக புலிகள் இன்று இல்­லா­மையின் கார­ண­மாக பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வன்­முறை ஒரு கார­ண­மாக இருக்­கப்­போ­வ­தில்லை. சமா­தா­னத்­திற்­கான விருப்பம் மிகவும் தெ ளிவாக காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான பிரச்­சி­னைகள் மீண்டும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதில் தேசிய அர­சாங்கம் மிகவும் கவ­ன­மாக இருக்­கின்­றது.

தற்­போ­தைய இந்த சந்­தர்ப்­பத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுத்துச் செல்ல முயற்சி செய்­கிறோம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் போர­வையில் கடந்த ஒக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

அந்­த­வ­கையில் நாங்கள் நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­ளவும், உண்­மையை கண்­ட­றி­யவும் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­க­வுள்ளோம். அந்த வடி­வத்தை தயா­ரிப்­ப­தற்­காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம்.

இலங்கை தற்போது ஜனநாயகமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான வெற்றிகரமான பயணத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
« PREV
NEXT »

No comments