இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊடகவியலாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சி.எஸ்.என் நிதிமோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, தனது சகோதரரான நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான அமர்வுக்கு சமுகமளிப்பதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்த தம்மிக்க ரணதுங்கவை, ஊடகவியலாளர்கள் படம்பிடிக்க முயன்றபோதே, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், தம்மிக்க அச்சுறுத்தல் விடுத்ததைப் பதிவு செய்துள்ளதாகவும் அதனைக் கொண்டு அவருக்கெதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment