இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் உரிய நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்துண்டிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கேசரிக்கு அளித்த விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தை ஒருபோதும் காரணம் கூற முடியாது. முன்னைய ஆட்சியின் செயற்பாடுகளின் விளைவாகவே இத்தகைய நிலைமை ஏற்பட்டது. எனினும் அதை ஆராய்ந்து சரி செய்ய வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு எமக்கு காலஅவகாசம் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை சாதாரண விடயமாக எடுக்க முடியாது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்திருந்தார்.
எனவே இது குறித்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின்துண்டிப்பு நாசகாரச் செயல் என்பதற்கான ஆதாரபூர்வ மான சாட்சிகள் உள்ளன.
எனினும் விசாரணைகளின் பின்னர் இதன் உண்மைத் தன்மை எமக்கு தெரியவரும்.
No comments
Post a Comment