உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்... நெஞ்சை உருக்கும் போட்டோ!
தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கை மற்றும் கால் உடைந்த நிலையில், தலையிலும் பலத்த காயத்தோடு மார்பில் ரத்தக்கறையோடு கட்டிலில் சிகிச்சைக்காக ஒரு பெண் படுத்துள்ளார்.
அந்த வேளையிலும், தன் காயங்களைப் பொருட்படுத்தாது, தன் ஆறு மாத மகனின் பசியை தாய்ப்பால் கொடுத்து ஆற்றுகிறார் அப்பெண்.
நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்தை யாரோ புகைப்படமாக பதிவு செய்துள்ளனர்.
அது ‘அம்மா அன்பின் சக்தி' என்ற தலைப்பில் தாய்லாந்து ஊடகங்களில் வெளியானது.பின்னர் இந்தப் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.
அதில், அந்த தாயின் பாசத்தை என்னவென்று சொல்ல என்று பாராட்டும், சீக்கிரம் அந்தத் தாய் குணமாகட்டும் என பிரார்த்தனைகளுமாக நிறைந்துள்ளன.
தற்போது அப்பெண்ணும், அவரது மகனும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனபோதும், இந்தப் புகைப்படத்தில் உள்ள அந்தப் பெண்ணிற்கு எப்படி இவ்வாறு பலத்த காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.
No comments
Post a Comment