Latest News

March 17, 2016

புலிகளின் தலைவர்கள் உயிருடன் -மகிந்த திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில்
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பது அம்பலமாகி இருப்பதால் மனமுடைந்த நிலையில் இருந்த முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த, கூட்டு எதிரணியினரின் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஹைட் மைதான வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பொல்லுகளுடன் சிலர் அலைந்து திரிவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் புலிகளை முற்றாக அழித்திவிட்டேன் என்று பொய் உரைத்ததாக சிங்கள மக்கள் மகிந்த மேல் கடுப்பாகி உள்ளதால் மகிந்தவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, குறித்த மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

« PREV
NEXT »

No comments