Latest News

March 17, 2016

கிளிநொச்சி மாணவர்கள் மூவர் மாயம்
by admin - 0

கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம் தொடர்பில் காவல்துறையிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் 11ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த தம்பிராசா ராகுலன், பிரபாகரன் பிரவீன், இந்திரன் இறைவாணன் ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள், தரம் ஒன்பது மற்றும் தரம் பத்தில் கல்வி கற்கின்ற 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  கிளிநொச்சி  காவல்துறையினர்  மேற்கொண்டு  வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments