Latest News

March 29, 2016

சர்வ சாதாரணமாக விமானத்தைக் கடத்திய தீவிரவாதி.. எகிப்தில் பாதுகாப்பு இவ்ளோதானா?
by admin - 0

கெய்ரோ: எகிப்து ஏர் நிறுவன விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டிய தீவிரவாதி கடத்தியுள்ளது அந்நாட்டின் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து வியக்க வைக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் கெய்ரோவுக்கு கிளம்பிய எகிப்துஏர் நிறுவன விமானத்தை உடலில் வெடிகுண்டுகள் கட்டிய தீவிரவாதி ஒருவர் சைப்ரஸுக்கு கடத்திச் சென்றுள்ளார்.

குண்டுகளை காட்டி மிரட்டி அவர் விமானத்தை லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்க வைத்துள்ளார் என்று விமானத்தின் கேப்டன் அமர் அல் கமால் தகவல் அனுப்பியுள்ளார். விமான நிலையத்தில் ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிருக்கும்?

வெடிகுண்டுகளுடன் ஒருவர் எளிதில் விமானத்தில் ஏறும் வகையில் தானா எகிப்து விமான நிலையங்களில் பாதுகாப்பு உள்ளது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விமானி இருக்கும் அறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது.

அப்படி இருக்கையில் விமானியின் அறைக் கதவை தீவிரவாதி எப்படி திறந்து உள்ளே நுழைந்தார் என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

« PREV
NEXT »

No comments