கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், அவ்விடத்திலிருந்து அரைக்காற்சட்டை, ரி-சேர்ட் மற்றும் பாவடையொன்றையும் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து கொண்டையாவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அவர் அந்த கன்றுக்குட்டியுடன் தகாத உறவில் ஈடுபடுவதற்கு முயற்சித்துள்ளார் என்றும் சந்தேகிக்கின்றனர்.
No comments
Post a Comment