பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Loampit vale வீதியில் சென்றுக்கொண்டிருந்த இரண்டடுக்கு பேரூந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது.
சிறிது நேரத்திற்குள் பேரூந்து முழுவதும் தீ பரவ தொடங்கியது.
இதையடுத்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
20 நிமிட போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாணவர் ஒருவர் கூறியதாவது, முதலில் தீ சிறிய அளவிலேயே இருந்தது.
பின்னர் மளமளவென பரவ தொடங்கியது. இதனால் பேருந்து முழுவதும் எரிந்து உருக தொடங்கியது என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் எந்த உயிர் சேதம் மற்றும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பேரூந்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment