எஞ்சியுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உத்தேச அரசியல் சாசன மற்றும் சட்டத் திருத்தங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தெரிவித்துள்ளது.
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து பொருத்தமான பயங்கரவாத தடைச் சட்டமொன்றை அறிமுகம் செய்யும் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அறிவித்துள்ளது.
யுத்த காலத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், எஞ்சியுள்ள காணிகளும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதேவேளை, நல்லிணக்க முனைப்புக்களில் அரசாங்கம் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நன்றி குளோபல்தமிழ்
No comments
Post a Comment