கிழக்கு மாகாணத்தின் முதலாவதும் இலங்கையின் முதலாவதும் தமிழ் மொழிமூலமானதுமான விவசாயக் கல்லூரி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா பாலமுனை விவசாயக் கல்லூரியின் அதிபரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் இடம்பெற்றது.4
இவ்விழாவில் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் மற்றும் விவசாயப்பயிற்சிப் பணிப்பாளர் ஆர்.எஸ். விஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண் டார்.
விவசாய விரிவாக்க பணிப்பாளர் ஆர்.எஸ். விஜயசேகர பாலமுனை விவசாயக் கல்லூரி அபிவிருத்திச் சபை சார்பாக முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சிலினால் பொன்னாடை போர்த்தியும் கல்லூரி நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டதோடு பாலமுனை விவசாயக் கல்லூரியின் அதிபரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர், விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் ஆகியோரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்
No comments
Post a Comment