Latest News

March 08, 2016

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
by admin - 0

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் .

கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர்.

கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து தனது கடமைகளின் ஊடாக படிப்படியாக உயர்ந்து போராளிகளின் மனதினில் இடம்பிடித்ததோடு… தளபதிகளின் மனங்களிலும் பதிவாகிப் போனதால் அவருக்குரிய தகுதிகளும் அவரைத் தேடியே வந்தது.

2000 ஆம் ஆண்டளவில் ஆணையிறவுப் பெருந்தளத்தை கைப்பற்ற குடாரப்புத் தரையிறக்கமே… வழி சமைதுதது. அந்த குடாரப்புத் தரையிறக்கத்தை பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் தலைமையிலான 1200 போரளிகளை எந்தவிதமான இழப்புக்களுமின்றி மிகவும் விவேகமாகவும்… நிதானமாகவும்… வெற்றிகரமாகத் தரையிறக்கம் செய்த கடற்புலிகளின் தளபதியே இவராவார்.

சிறிலங்கா படையினரின் தொலைதொடர்பினை விடுதலைப்புலிகள் இலகுவில் ஓட்டுகேட்டு கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு வெளிநாடு ஒன்றில் இருந்து ( பாகிஸ்தான்)நவீன ரக தொலைத்தொடர்பு கருவிகளை கொள்வனவு செய்து களமுனையில் படையினரின் செயற்பாட்டுக்காக பயன்பாட்டில் விட்டிருந்தது.இது ஒட்டுகேட்பது கடினமானதுதான்.ஆரம்பத்தில் இதனை உடறுத்து ஒட்டுகேட்பது என்பது முடியாததாகவே இருந்தது.எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை புலிகள் இதனையும் வெற்றி கொண்டு அதன் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதற்கேற்ப வகையில் ஓட்டுகேட்க்க துவங்கினார்கள்.அதனை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றால்,பாகிஸ்தான் வழங்கியிருந்த தொலைத்தொடர்பு கருவியினை சிறிலங்கா படையினர் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்து பயன்படுத்த தொடங்கினார்கள்.அதாவது சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வந்து தாக்குதலை நடத்தும் போது,இவ்வாறு ஓட்டுகேட்க்க முடியாத கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இந்த நிலையில் ஆழ உடுருவும் அணியின் தாக்குதல் ஒன்றினை வவுனியா புளியங்குளம் பகுதிக்கு அண்மையாக விடுதலைப்புலிகள் முறியடித்து இருந்தனர்.

இதன்போது ஆழ உடுருவும் படையினரின் சடலம் ஒன்று வெடிபொருட்கள் என்பனவற்றுடன் பாகிஸ்தான் வழங்கிய புதிய தொலைத்தொடர்பு கருவியும் புலிகள் வசம் வந்து சேர்ந்தது.அதனை பார்த்தபோது புலிகளுக்கு ஆச்சரியமாகி போனது,ஏனெனில் நவீன தொலைத்தொடர்பு கருவி என்று சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கிய அந்த தொடர்பாடல் கருவிகளை சிறிலங்கா பாவனைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் தமது பாவனையில் வைத்திருந்தனர்.உடனடியாக அதன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு ஒட்டுகேட்க முடியாது என்று கருதிய பாகிஸ்தான் தொடர்பாடல் கருவியில் உரையாடிய படையினரின் உரையாடல்களையும் போராளிகள் ஒட்டுகேட்க தொடங்கினார்கள்.இதேவேளை தென்னிலங்கையில் தாக்குதலுக்கான பொருட்கள்,நகர்வுகள், மன்னார் கடல்வழியாகவே நகர்த்த படுகின்றன.என ஏற்கனவே பார்த்திருந்தோம் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவுக்கு பின் மங்களேஸ் மாஸ்டரிடம் சில பணிகள் கொடுக்கபடுகின்றன.இதனைவிட இவர் திருக்கேதீஸ்வரம் கட்டளைத்தளபதியகவும் செயற்பட்டு கொண்டிருந்தார்.இவரது முதன்மையான கட்டளை மையம் அடம்பன் மாகவித்தியலத்திற்கு அருகாமையில் காணப்பட்டது.கடற்புலி போராளிகளை வைத்தே திருக்கேதீஸ்வரம் பகுதி எதிர்த்தாக்குதல் நடைபெறுகிறது.இவருக்கு கீழ்தான் பொறுப்பாளர் காதர் அவர்களும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறுதான் அன்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைபுலிகளின் காவலரண் ஒன்றை எதிரி கைப்பற்றி விட்டான்.இதில் போராளிகள் பலர் வீரச்சாவு அடைகின்றார்கள்.இக்காவலரண் மீட்பதுக்கான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தி மீட்கிறார்கள்.இதன்போது விடுதலைபுலிகளின் காவலரணில் நின்ற சிறிலங்கா படையினர் சில நரிவேலைகளை செய்திருந்தார்கள்.காவலரண் முன் சிறிலங்கா படையினருக்கு வைத்த மிதிவெடிகளை சிறிலங்கா படையினர் எடுத்து அந்த காவலரணில் வாசல்கள் ,உள்வந்து இருக்கும் இடம் அதற்க்கு பின்புள்ள விடுதலைப்புலிகள் நடமாட்ட பாதை போன்ற இடங்களில் புதைக்கிறார்கள்.புலிகளின் நடமாட்ட பாதையில் சிறிலங்கா படையினர் புதைத்துவிட்டு போன மிதிவெடியில் மங்களேஸ் கால் வைக்கிறார்.மிதிவெடியில் கால்பட்டு கீழே விழும்போது,அருகில் புதைத்து வைக்கபட்டிருந்த இன்னொரு மிதிவெடியில் உடம்பு விழ அதுவும் வெடிக்க லெப்.கேணல் .மங்களேஸ் மாஸ்டர் அந்த இடத்துலயே வீரச்சாவை தழுவி கொள்ளுகிறார்.

08.03.2008 அன்று தான் நேசித்த மக்களுக்காக தனது உயிரை ஈர்ந்தார்.

இன்று இவரது 8 ஆம் ஆண்டு நினைவுநாள் ஆகும்.

இம் மாவீரருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

“தமிழரின் தாகம்… தமிழீழத் தாயகம்”
« PREV
NEXT »

No comments