Latest News

February 15, 2016

தமிழ்த்தேசிய போராளி சுப.முத்துகுமாரின் வீர வணக்க நினைவு நாள் இன்று.
by admin - 0

தமிழ்த்தேசிய போராளி  சுப.முத்துகுமாரின் வீர வணக்க நினைவு நாள் இன்று.

மண்டியிடாத் தமிழனின்  இன உணர்வை போற்றி தமிழ் தேசிய மக்களாக வீர வணக்கம் செலுத்துவோம்.

தமிழக தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராட முன்வந்த இவர் அக்காலத்தில் தமிழ் தேசிய போராளி வீரப்பனோடு  சேர்ந்து  புரட்சி பாதையில் சத்தியமங்களக் காடுகளில் எழுச்சி பயணத்தை தொடர்ந்தார்..

1983ல் ஈழத்தில் கருப்பு ஜுலை படுகொலைகள் நடந்த பிறகு தன்னெழுச்சியாக எழுந்த தமிழ் எழுச்சி சிந்தனையாளர்களில் ஒருவரே தோழர் சுப.முத்துகுமார் ஆவார்.

தான் நம்பும் அனைத்து தமிழ் தேசிய மக்களோடும் தோழமை பூண்டு தமிழினத்தின் விடுதலைக்கு கட்சிகள் கடந்து மக்கள் போராட பெருவிருப்பு கொண்டவராக திகழ்ந்தார்.

ஈழ விடுதலைக்கு தமிழகம் விடுதலை  பெறுவதே முதன்மை வழி என உணர்ந்து போராடியவர். 

ஆனால் ஈழப்படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த தமிழ்த்தேசிய சிந்தனையை அடக்க தோழர்  சுப.முத்துகுமாரை ஒட்டுகுழுக்களின் உதவியுடன் படுகொலை செய்தது  இந்தியம்.

அவரை படுகொலை செய்ததால் அவர் விதைத்த சிந்தனைகளை அழித்து விட முடியவில்லை இந்தியத்தால். 

வீறு கொண்ட தமிழ் தேசிய உணர்வின் எழுச்சியாக தமிழர்கள் நெஞ்சங்களில் தோழர் சு. ப. முத்துக்குமார் திகழ்கின்றார்.

வீர வணக்க செலுத்துவோம் இந்த வீரத் தமிழ் போராளிக்கு!
« PREV
NEXT »

No comments