Latest News

February 26, 2016

ஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை! வவுனியா பொலிசார்
by admin - 0

ஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சந்தேகப்படும் வகையில் பல கருத்துக்களைப் பெற்றுள்ளோம் என வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

ஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் நீதிமன்றம் முன்றலில் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, 

ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் நாம் சாதாரண முறைப்படி விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்துள்ளோம். அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட நபரிடம் சந்தேக படும்படியான பல கருத்துக்களை பெற்றே தற்போது கைது செய்துள்ளோம். 

சிலர் தாயை சந்தேகம் என கூறுகின்றனர். எனினும் அவ்வாறு எதுவும் இல்லை. அத்துடன் இச் சிறுமியும் எவரையும் காதலிக்கவும் இல்லை என்பதும் எமக்கு தெரியவந்துள்ளதுடன், களவெடுக்கும் நோக்கோடும் எவரும் அவரின் வீட்டிற்குள் செல்லவும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments