இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புசபை இந்தக்கோரிக்கையை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது அமர்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த கோரிக்கையில்,
2015ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட மனித உரிமை காப்பு பிரமாணங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகளின் பேரவை, இலங்கை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளின்போது சர்வதேசத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகள் அவசியமானவை.
இந்தநிலையில் நியாயமான முன்னெடுப்பு ஒன்றின்மூலமே மீண்டும் வரக்கூடிய வன்முறைகளை தடுக்க முடியும் என்று மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இலங்கையில் சாட்சி பாதுகாப்பு விடயங்கள் சர்வதேச நியமத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்றும் அந்தக்கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment