மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நல்லாட்சியிலும் நவீன அடிமைகளாகத்தான் துன்பத்தில்!
மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலுக்கான சம்பளப் பிரச்சனையையே தீர்க்காமல் இழுத்தடித்துக் காலம் கடத்தி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி வரும் நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலமாக இருந்து வரும் தமிழர்களின் இனப்பிரச்சனையைத் தீர்க்குமா?
என பாதிக்கப்பட்ட மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
மலையகத்தில் தோட்டங்களில் கஸ்டப்பட்டு வேலை செய்யும் மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்காமல் அவர்களின் உழைப்பை சுரண்டிக் கொள்ளையடிப்பதால் அந்த மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொன்டு நடத்த முடியாமல் அவலப்பட்டு அந்தரிக்கின்றார்கள்.
அவர்களின் உழைப்புக்கேற்ற சம்பளம் வழங்கப்படாதமையால் அவர்கள் அன்றாட உணவுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் துன்பப்பட்டுத் துடிக்கின்றார்கள்.
மலையக மக்களின் சம்பளப் பிரச்சனையையே தீர்க்க மனமில்லாத நல்லாட்சி அரசு தமழர்களின் இனப்பிரச்சனையைத் தீர்க்குமா?
இதில் அவர்களது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்குக்கூட வசதியின்றிக் கஸ்டப்படுகின்றார்கள். இதனைக் கூறினால் அவர்கள் படித்து என்னத்தைக் கிழிக்கப்போகிறார்கள் அவர்கள் படித்தால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலைசெய்வது யார்?
என்றும் திட்டுகின்றார்களாம்.
தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குமாறு நல்லாட்சி அரசாங்காத்திடம் பலதடவைகள் கேட்டுப் பல போராட்டங்களில் ஈடுபட்டும் அவர்களைப் பற்றி நல்லாட்சிக்கான அரசாங்கம் கருத்தில் எடுக்காமல் நல்லர்சியின் அடிமைகளாகவே தாம் பார்க்கப்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் கூறிக்கவலை தெரிவிக்கின்றார்கள்.
மற்றும் தோட்டப் பகுதிகளில் படித்தவர்களைக்கூட அரச ஊழியர்களாக நியமிப்பதாகக் கூறி நல்லாட்சி அரசாங்கமும் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்குத்தான் வேலைக்கமர்த்தியுள்ளார்கள் என்றால் பார்க்கவும் வேண்டுமா?
தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவே இன்றைக்கும நோக்கப்படுகின்றார்கள் என்பதற்கு தோட்டங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தை வழங்காமல் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதும் அவர்களின் படித்த பிள்ளைகளை 6000 ரூபா மாதச் சம்பளத்திற்கு அரச வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுறண்டுவதிலிருந்தும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அவர்களின் அடிமைகளாக தோட்டத் தொழிலாளர்களை நோக்குகின்றார்கள் என்பது வெளிப்பட்டு நிற்கின்றது.
No comments
Post a Comment