சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காதலர் தினமான இன்று ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சிம்புவும், நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
ஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment