Latest News

February 07, 2016

செய்யித் அல் ஹூஸைன் இலங்கையை வந்தடைந்தார்
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் நேற்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்யித் ராத் அல் ஹூஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இன்று மற்றும் நாளை \ அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைன் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஹைப்ரிட் நீதிமன்றம் தொடர்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள இவர் தனது விஜயம் குறித்து இறுதி தினத்தன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments