Latest News

February 04, 2016

தலைவர் நம்பிக்கை வைக்காத, தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.!
by admin - 0

தலைவர் நம்பிக்கை வைக்காத,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.!

ஈழத்து துரோணர்.!! 

எனது நண்பர்களின் முக்கியமான கோரிக்கை ஒன்று, இலங்கையின் இப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றிய பதிவுகளை எழுத வேண்டும் என்பது. நண்பர்களே நான், கதாசிரியனோ அல்லது அரசியல் ஆய்வாளனோ அல்ல.

மாறாக, ஆவணப்படுத்தப்படாத எமது போராட்டங்களின் பக்கங்களை மட்டுமே உங்களோடு, ஆவணப்படுத்தும் நோக்கில் பகிர்ந்து வருகின்றேன். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இப்போதைய எங்கள் அரசியல் தலைவர்கள் எல்லோரையும் எனக்கு தெரியாது. அவர்களின் கொள்கைகளும் எனக்கு தெரியாது. ஆனபோதும் கூட்டமைப்பு உருவானது எப்படி என்பதை என்னால் விளக்க முடியும்.  

இன்றைய நிலையில் இவர்களை நான் நம்பியதில்லை. அதன் வெளிப்பாடோ என்னோவோ இலங்கை அரசியலில் இருந்து விலகியே நான் இருக்கின்றேன். நேற்று "சிங்களத்தின் எதிர்கட்சி தலைவர்" சம்பந்தன் ஐயாவின் நேர்காணலின் ஒரு பகுதி ஒன்றில், ஒரு கேள்வி ஒன்று அவரிடம் கேட்கப்பட்டது. 

அதாவது "புலிகள் அமைப்பு தானே தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர்" என்று கேட்டதற்கு  இல்லை என முற்றாக மறுத்திருந்தார். அத்தோடு இன்னுமொரு கேள்வியில் "அவர்கள் தானே உங்களை, அதன் தலைவராக நியமித்தார்கள்" என்பதற்கும் ஆக்ரோசமாக மறுத்திருந்தார். 

இது உண்மை தெரிந்த பலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். சத்தியமாக எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனெனில் நாங்கள் பிரபாகரன் வளர்த்த பிள்ளைகள். இது மட்டுமில்லாது தமிழீழ கொள்கையை கைவிட்டதாகவும் ஸ்ரீதரன் கூறினார் என்று கோபப்படுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் அவர்கள் டிசைன் அப்படி தான். 

சரி இந்த கூட்டமைப்பு எப்படி உருவாகியது, ஏன், உருவாகியது, யாரால் உருவாக்கப்பட்டது.? இந்த கேள்விக்கான பதிலுக்கு கொஞ்சம் நாமும் பின்னோக்கி போகவேண்டும். எமது போராட்டம் ஆரம்பித்த காலங்களில் பலதரப்பட்டவர்கள் களை எடுக்கப்பட்டார்கள். அதில் சமூகவிரோதிகள், உளவாளிகள், மற்றும் தமிழர் தேசத்திற்கு எதிரான அரசியல் செயல்பாடுடையோர் போன்றவர்கள் முக்கியமானவர்கள். 

அதில் முக்கியமாக அமிர்தலிங்கம் தொடக்கம் பலரது வரலாற்றை நான் பதிவு செய்துள்ளேன். அப்படி, புலிகளின் தண்டனைப்பட்டியலில் இருந்தவர்கள் தான் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்த்தர்கள் அனைவரும். 

இப்படி ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்ட போது தான், பிரபல இராணுவ ஆய்வாளர் திரு.சிவராம் அவர்களாலும், மாமனிதர் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களாலும் மாற்று யோசனை ஒன்று பாலா அண்ணையிடம் முன்வைக்கப்பட்டது. 

அதன் சாதக, பாதக தன்மையை ஆராய்ந்த பாலா அண்ணை, சர்வதேச கொள்கை வகுப்பாளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் இவர்களுக்கான தண்டனையை ரத்து செய்யும் படியான கோரிக்கையை முன் வைத்தார். 

உண்மையில் தலைவர் இந்த முன்னெடுப்பிற்கு ஆரம்பத்தில், எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை.   தமிழர் சார்பில் அரசியல் வெளியில் ஒருமித்த குரல் ஒன்று இப்போது தேவை என்பதற்காகவும், சர்வதேச அழுத்தங்கள்  காரணமாகவும், பாலாண்ணையின் வேண்டுகோளுக்கும் தான் சம்மதம் தெரிவித்தார். அதன் பின் உருவானதே கூட்டமைப்பு.!

ஆனபோதும் இவர்கள் மேல் தலைவருக்கு எந்தவித நம்பிக்கையோ, அல்லது நல்ல அபிப்பிராயமோ என்றும் இருந்ததில்லை.. "தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை" என்பது போல, இவர்களின் அடிப்படைக் குணங்கள் என்றும் மாறப்போவதில்லை.!

இவர்கள் எப்போதும் விலை போகக்கூடியவர்கள், மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகள் கொண்டவர்கள்  என்பதே இவர்கள் மேல் தலைவருக்கு இருந்த எண்ணம். இன்று தலைவரின் எண்ணத்தை உண்மையென நிருபித்துக் கொண்டிருக்கின்றனர்.  

பல வருடங்கள் கடந்த பின் ,அவர்களின் உண்மை குணங்கள் இன்று வெளிப்பாட ஆரம்பித்து விட்டது. ஆக இவர்களால் தமிழருக்காக, சிங்கள அரசிடமிருந்து எந்த ஆணியும் பிடுங்க முடியாது. இது பற்றி சம்பந்தன் ஐயா, எதிர்கட்சி தலைவராக பொறுப்பெடுத்த போது தெளிவாக பதிவு செய்திருந்தேன். அதையும் ஒருமுறை பாருங்கள்.   

2009 முன் பொந்துகளில் ஒளிந்திருந்த சர்ப்பங்கள், இன்று தலையை மட்டும் நீட்டி விஷத்தை கக்குகின்றன. இதே நிலை தொடர்ந்தாள் மீண்டும் இந்த "சர்ப்பங்களில் தலைகள்" தமிழரால் கொய்யப்படும். இதுவே வரலாறும்.!                           
உண்மையுடன் துரோணர்..!!
« PREV
NEXT »

No comments