Latest News

February 04, 2016

பிரித்தானியாவில் அமைந்துள்ள சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகத்திற்கு முன்பு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
by admin - 0

4-2-2016 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகத்திற்கு முன்பு சுதந்திர தினத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சுதந்திர தினம் என்பதால் தூரதகத்தின் வழமையான வேலைகளுக்கு விடுமுறை என கதவில் எழுதி ஒட்டிவிட்டு கொண்டாட்டங்கள் தூதரகத்தினுள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

விசாலாமாக திறந்திருக்கப்பட்ட கதவுகள் எம்மைக் கண்டவுடன்  மூடிக்கொண்டுவிட்டது. தூதரகத்தில் இருந்து பிரித்தானிய காவல்த்துறைக்கு தகவல் பறந்தவுடன் ஆயுதம் தாங்கிய காவல்த்துறையினர் வந்து காவலில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு மக்கள் வரவும் அதிகரிக்க அதிகரிக்க மூன்றுக்கும் மேட்பட்ட வாகனங்களில் 70க்கும் மேட்பட்ட காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அந்தக் காவலையும் மீறி சிங்கள பயங்கரவாத அரசின் கொடியும், தமிழர்களை அடக்கி வைக்க எழுதப்பட்ட சாசனமும் தீக்கிரையாக்கப்பட்டது. 

முழுவதும் எரிந்து முடியும்பொழுது காவல்த்துறையினர் அதை வாங்கி அவர்களின் காலில் போட்டு மிதித்து தீயை அனைத்தனர் அப்போது சிங்கள கொடி பிரித்தானிய காவலர்களின் கால்களிலும் மிதிபட்டது.

தமிழீழ மண்ணை விட்டு வெளியேறு, தமிழீழம் எங்கள் தேசம், சிங்கள அரசே பயங்கரவாதிகள் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது

அவ்வப்போது சில சிங்கள அதிகாரிகள், விருந்தினர்கள் காவல்த்துறையின் பாதுகாப்புடன் வெளியே சென்றனர். நாம் சிங்கள பயங்கரவாத தூதரகத்தின் வாசல் கதவு வரை சென்று கருப்புகொடி நாட்டி எமது கடும் எதிர்ப்பை பதிவு செய்தோம். 2மணிக்கு துவங்கிய எதிர்ப்பு போராட்டம் மாலை 5 மணியலவில் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் முடிவடைந்தது.










« PREV
NEXT »

No comments