Latest News

February 28, 2016

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி!
by admin - 0

சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. 

சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதையொட்டி சமூகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்ற பிரேரணையை இன்று மக்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

இப்பிரேரணையானது, சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டவர்களில் 25 வீதமானோரை நியாயமற்ற வகையில் இலக்கு வைப்பதாக உள்ளது என, இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். 

உள்நாட்டவர்கள், மற்றும் வெளிநாட்டவர்கள் என பேதம் காட்டும், இரண்டடுக்கு நீதி பரிபாலன முறையை இது தோற்றுவிப்பதாக உள்ளது எனவும் இதற்கு எதிரானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன் நிலையில் இம் மசோதாவை எதிர்த்து 59வீதமான மக்கள் வாக்களித்துள்ளதுடன் சுவிஸ் மக்கள் கட்சியின் நிலைப்பாடு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரிய பின்னடைவு என்பதுடன் சுவிஸ் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

« PREV
NEXT »

No comments