Latest News

February 03, 2016

2016 ல் தீர்வு வரும் என நம்பிக்கையில் சுமந்திரனும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் ஸ்ரீலங்கா சுகந்திர தினத்தில் பங்குபற்றுகிறார்கள்
by admin - 0

2016 ல் தீர்வு வரும் என நம்பிக்கையில் சுமந்திரனும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் சுகந்திர தின நிகழ்வில்  ஸ்ரீலங்கா சுகந்திர தினத்தில் பங்குபற்றுகிறார்கள்  

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்பார்.
அவருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார் என கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாததன் காரணத்தால் இச்சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளிடையே கருத்துக்கள் மேலெழுந்திருந்தன. அத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் தலைவர், ஊடகப்பேச்சாளர் ஆகிய இருவரும் சுதந்திரதினத்தில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. முன்னதாக கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றிருந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டுமாவட்டகளை பிரதிநிதித்துவம் ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
« PREV
NEXT »

No comments