மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத் திறப்பு விழாவும்,பரிசில்நாள் நிகழ்வும் இன்று(8)நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.
இதன் போது இலங்கை தேசிய கொடியை ஏற்றுவதற்காக இராஜாங்க அமைச்சரை அழைத்த போது தேசிய கொடியை ஏற்றமறுத்துவிட்டார். இதனால் இலங்கை தேசிய கொடியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் ஏற்றிவைத்தார்.
இது தொடர்பில் உரையாற்றும் போது கருத்துத் தெரிவித்த சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்- நான் பாராளுமன்ற உறுப்பினராகி ஆறு வருடங்களாகிவிட்டது, ஆனால் நான் ஒரு நாளும் எனது கையால் இன்று வரை சிங்கக் கொடியை ஏற்றியதில்லை.எங்களுக்கு என்று ஒரு கொள்கை இருக்கின்றது கொள்கையோடுதான் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.
சிங்கக்கொடி பிடிக்கும் கூட்டமைப்பு எங்கே அதை ஏற்ற மறுக்கும் இவர் எங்கே என மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்
No comments
Post a Comment