பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மூன்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சம்பந்தன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேபியன் ஹமில்டன், கொலின் பெதும் மற்றும் ஆசோலே பொஸ்கிம் ஆகியோரே இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பிற்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை.
பிரிட்டன் அரசாங்கம் இலங்கையின் உள்விவகாரங்களில் கடுமையாக தலையீடு செய்வதாக வடக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், சம்பந்தனுக்கும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எப்போது, எங்கு, என்ன அடிப்படையில், எதற்காக சந்திப்பு நடத்தப்பட்டது போன்ற விடயங்கள் எதனையும் திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நாட்டுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துவது வழமையானது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
No comments
Post a Comment