சிரியக் களத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்குமா..?
- இதயச்சந்திரன்
குர்திஸ், சுனி அரபி, மற்றும் அலவயிட் + கிறிஸ்தவர்கள் .......இவ்வாறான மூன்று பிரிவினரையும் இணைத்த ஒரு கூட்டாட்சி ( Confederation ) அமைவதே, சிரியப் பிரச்சினைக்கு தீர்வாகுமென அமெரிக்க Think Tank கூட்டமொன்று சொல்கிறது.
தங்களுடைய Moderate Rebels ( அதாங்க தமிழில் மிதவாத புட்சியாளருங்கோ ) பலவீனமாக சிதறுண்டு இருப்பதனால் , இப்போதைக்கு 'போர்நிறுத்தங்கள்' வெற்றிபெற வாய்ப்பில்லை என்று கூறும் அந்த மாபெரும் சிந்தனைக் கிணறு , சிரியாவில் அமெரிக்க இராஜ தந்திரம் தோல்வியுற்று விட்டது என்று அடித்துச் சொல்கிறது.
அரபுப் புரட்சியெல்லாம் ஆடிக் காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இரண்டு வாரகால போர்நிறுத்தம் தோல்வியுற்றால், அமெரிக்கா ஈரடி பின்னால் நகர்ந்து, துருக்கியையும் சவுதியையும் வைத்து தனது யுத்த காய்களை நகர்த்துமென எதிர்பார்க்கலாம்.
ஆக மொத்தம், மத்திய கிழக்கில் அமெரிக்க மேற்கொண்ட இரண்டு இராஜ தந்திர நகர்வுகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள்.
ஈரான் மீது தடைகளை விதித்தும் அதனை அசைக்க முடியவில்லை.
அடுத்து சிரியா!.
அங்கு மிதவாதிகளை ஏவி, அரபுப் புரட்சியை உருவாக்கலாமென்று பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ரஷ்யாவும் உள்நுழைந்து விட்டது.
அடுத்த நகர்வாக சிரியாவை மூன்றாக உடைத்து, அலவயிட் கிருஸ்தவர்கள் கொண்ட மாநிலத்தில் அதிபர் பஷார் அல் அசாத்தை முடக்குவதுதான் அமெரிக்காவின் வியூகம்.
ஆயினும் அமெரிக்காவின் மிதவாதப்படைகள் நொந்துபோயிருக்கும் நிலையில் இது சாத்தியமா?.
ரஷ்யாவின் பேராதரவு பெற்ற அசாத்தின் படையினர், பல பிரதேசங்களை விடுவித்தவாறு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க சற்று ஒதுங்க, நேட்டோவின் பங்காளி துருக்கி நேரடியாக மோதலில் ஈடுபடுமா?
அதற்கான முழுமையான ஆதரவினை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்குமா ?
என்பதனை ஓரிரு மாதங்களில் தெரிந்து கொள்ளலாம்.
No comments
Post a Comment