மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) நிறுவனத்தின் தயாரிப்புக்களை குறிப்பிட்ட நிறுவனம் 55 நாடுகளில் இருந்து மீளப் பெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாஸ் நிறுவனத்தின் நெதர்லாந்து தொழிற்சாலையின் தயாரிப்பான மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் சொக்லேட்டை யேர்மனியில் பெற்ற நபர் ஒருவர் தான் பெற்ற சொக்லேட்டிற்குள் பிளாஸ்ரிக் துண்டொன்று இருந்ததென வெளிப்படுத்தியதை அடுத்தே நெதர்லாந்தில் உள்ள மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் சொக்லேட் தொழிற்சாலை 55 நாடுகளிற்கு வழங்கியிருந்த சொக்லேட்டை மீளப்பெறுவதாக தெரிவித்துள்ளது.
பல மில்லியன் கணக்கான சொக்லேட் துண்டுகள் மீளப் பெறப்பட்டு அவற்றில் வேறு பிளாஸ்ரிக் துண்டுகள் ஏதும் உள்ளனவா என ஆராய்வதுடன் விசாரணை செய்யப்படும் என நெதர்லாந்து தொழிற்சாலையின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தொழிற்சாலையின் அறிவிப்பு செக்லேட் விரும்பிகளிற்கு அதிர்ச்சியான செய்தியென பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments
Post a Comment