வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் யோஷித்த ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையறைக்கு அருகில் உள்ள சில சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கிய யானைக்குட்டிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு 4 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய சிரேஸ்ட வழக்கறிஞர் திலீபா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆணை மூலம் வழங்கப்பட்ட யானைகுட்டிகள் குறித்த விசாரணையை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும், குறிப்பாக இந்த யானைக்குட்டிகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் ஆணையை தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த நெவில் வன்னியாராச்சி என்ற அதிகாரி மூலம் யானைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் சில யானைகள் காணமற்போயுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment