Latest News

February 23, 2016

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற வடமாகாண முழுநிலா கலை விழா நிகழ்வுகள்
by admin - 0

வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்று(22-02-2016) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் முழுநலாக் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. 

மு.ப 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவிகளின் இன்னிய இசையுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அவர்களும் கலந்துகொண்டனர். விருந்தினர்களாக பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம், முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர், மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றலைத்தொடர்ந்து வரவேற்புரையினை கிளிநொச்சி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி க.அபிராமி நிகழ்த்தினார். 
கிளிநொச்சி வலய பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், குழு இசை, நடனம், கிராமிய நடனம்,நாடகம் என பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன.




« PREV
NEXT »

No comments