Latest News

February 12, 2016

ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள்
by admin - 0

பேரண்டத்தில் ஏதாவது ஒரு பெரும் சம்பவம் நிகழும்போது இந்த ஈர்ப்புசக்தி அலைகள் உருவாக்கப்படுகின்றன- உதாரணமாக, நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போதோ அல்லது கருந்துளைகள் மோதிக்கொள்ளும்போது போன்ற நிகழ்வுகள்.
அவ்வாறு நிகழும்போது, அவை அண்டவெளியில் மெலிதான அலைகளை உருவாக்கி , அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது , காலத்தையும் இடத்தையும் இழுத்துக்கொண்டும், அழுத்திக்கொண்டும் பயணிக்கின்றன.


இவை ஏன் முக்கியமானவை என்பதற்கு ஐந்து காரணங்களைக் கூறுகிறார் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் பல்லவ் கோஷ்:
1. இந்த ஈர்ப்பு சக்தி அலைகள்தான் கடந்த நூற்றாண்டின் இயல்பியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த பொதுச் சார்பியல் தத்துவத்தில் எதிர்வு கூறியவற்றில் கடைசியாக நிரூபணமாகியிருக்கும் விஷயம்.
2. ஆனால் ஐன்ஸ்டைன் இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். அது தவறாகிவிட்டது. இப்போது அந்த அலைகளை இக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
3.இதன் மூலம் இனி அண்ட வெளியை முற்றிலும் புதிய கோணத்தில் நம்மால் பார்க்க முடியும். சாதாரண தொலைநோக்கிகளால் பார்க்கமுடியாத வகையில் நம்மால் பார்க்க முடியும். இனி நம்மால் கருந்துளைகளைக் காணமுடியும், அண்டவெளியில் மேலும் ஆழமாகச் சென்று பார்க்க முடியும் மற்றும் அண்டம் உருவாகியதாகக் கூறப்படும் பெரு வெடிப்பு தருணம் வரை கூட காலத்தில் மேலும் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
4.மேலும் ஈர்ப்பு சக்தி எப்படி உண்மையில் வேலை செய்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
5.இதன் மூலம் இயல்பியல் விஞ்ஞானிகளால் எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கொள்கையை உருவாக்க முடியும் .

Image copyrightReuters
Image captionஸ்டீபன் ஹாக்கிங்

ஐன்ஸ்டைன் இருந்திருந்தால், இந்த கண்டுபிடிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்

கருந்துளைகள் குறித்த ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயல்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த கண்டுபிடிப்பு அறிவியல் வரலாற்றில் மிகமுக்கியமானது என்கிறார்.
" அண்டத்தை ஆராய்வதில் முற்றிலும் புதிய ஒரு வழியை இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் தருகின்றன. அந்த அலைகளைக் கண்டுபிடிப்பது என்பது விண்ணியலை புரட்சிகரமான வகையில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. இந்த கண்டுபிடிப்புத்தான், கறுந்துளைகள் இணைவதைக் காட்டும் முதல் கண்டுபிடிப்பு", என்றார் ஹாக்கிங்.

BBC
« PREV
NEXT »

No comments