Latest News

February 12, 2016

லண்டனில் வித்தியாவை தமிழர்கள் உயிர்காக்க வைப்பார்களா ? உடனடி உதவி தேவை !
by admin - 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வித்தியா ரத்தப் புற்றுநோயால் உயிருக்காகப் போராடி வருகிறார். இவர் ஒரு மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்க விடையம். இவரின் ஒத்த இரத்த மாதிரியை உடைய இன்னொருவரின் இரத்தமானது இவரின் உயிரைக் காக்கும். 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள, மற்றும் 40 வயதை தாண்டாத பெண் அல்லது ஒரு ஆண் இவருக்கு எலும்பு மச்சையை (bone marrow) கொடுக்கலாம். எலும்பு மச்சை என்பது எமது உடலில் உள்ள கை மற்றும் கால் எலும்புக்கு உள்ளே உள்ள ஒரு சிறிய திசு. இவை மீண்டும் மீண்டும் வளரும். பொருந்தக்கூடிய ஒருவரிடம் இருந்து குருதி(எலும்பு மச்சை) எடுக்கப்படும் வித்தியாவுக்கு வைத்தால். அது வளர்ந்து புதிய ரத்தத்தை தோற்றுவிக்கும். இதனால் அவர் உயிர்பிழைப்பார்.

சிறிய துண்டு எலும்பு மச்சையைக் கொடுப்பது என்பது , ஒரு சாதாரண செயல் தான். அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வெட்டப்பட்ட பகுதி சில மாதங்களில் மீண்டும் வளர்ந்துவிடும். எனவே எவரும் அச்சம் கொள்ளாமல் இதனைச் செய்யலாம். வித்தியாவின் உயிரை , காக்க லண்டன் தமிழர்களில் யாராவது ஒருவர் முன்வரமாட்டார்களா ? தயவு செய்து உதவுங்கள் நன்றி.

ரத்த உள்ளவர்கள்: B+

                                     B
                                    O+

உடனே தொர்பு கொள்ளுங்கள்: 07550420087


« PREV
NEXT »

No comments