வேவல்வத்தை தோட்டத்திலிருந்து பலாங்கொடை நகருக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் செல்லும் தமிழ் பாடசாலை மாணவர்கள் குறித்த பஸ்ஸின் நடத்துனரால் தகாத முறையில் நடத்தப்பட்டும், டிக்கட் புத்தகத்தால் தலையில் தாக்கும் நிலைமைகளும் நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரட்டைக் கதவு பஸ்ஸை தவிர்த்து தற்போது ஒற்றைக் கதவுடைய பஸ்ஸினையே சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 பேர் வரையான மாணவ மாணவியர் பாடசாலைக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோரும் மாணவர்களும் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க ஆசனங்களில் அமர்ந்திருக்கும் தமிழ் மாணவ மாணவியரை எழச் செய்து அவ்வாசனங்களில் சிங்கள மாணவர்களை அமரச் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்படி பஸ்ஸின் நடத்துனர்கள் மேற்கொண்டு வருவதாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர்களிடம் புகார் செய்துள்ளனர். மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இ.போ.ச சாலை முகாமையாளரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரட்டைக் கதவு பஸ் தற்போது ஒற்றைக்கதவு பஸ்ஸாக மாறியுள்ளது.
இதனால் நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 பேர் வரையான மாணவ மாணவியர் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.45 மணிக்கு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய பயணி கள் பயணிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைமைகளை புகார் செய்ததையடுத்து, பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு பஸ் சேவையை வீழ்ச்சியடைய செய்திருப்பதாகவும் பொதுமக்கள் விச னம் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்ற னர்.
No comments
Post a Comment