லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தரையில் இருந்த நபர் ஒருவர் விமானத்தை நோக்கி லேசர் கதிர் சாதனத்தை பிடித்துள்ளார். லேசர் கதிர் விமானியின் கண்களில் பட்டு அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்தினை நோக்கி திருப்பப்பட்டது.
பார்வை பாதிப்புக்குள்ளான விமானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
மேலும் வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட லேசர் கதிர் கொண்டு தாக்குதல் குறித்து மெட்ரோ பொலிட்டன் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment