Latest News

January 29, 2016

'போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல்
by admin - 0

‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்திற்கு தடை விதிக்கக்கோரி இசைப்பிரியாவின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
போர்க்களத்தில் ஒரு பூ’

இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்குமாறு திரைப்படத்தின் இயக்குனர் கே.கணேசன் மற்றும் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படத்தின் இயக்குனர் கே.கணேசன், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சனல்-4 இனால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பிலான வீடியோக்களை மையமாக வைத்தே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 இனால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்புகளை பார்த்ததன் பின்னரே போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் தமக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தினை இயக்குவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி திரைப்படச்சான்றிதழ் மத்திய வாரியம் அனுமதி மறுதிருந்தாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments