பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் கடந்த மாதம் தே.மு.தி.க வின் தலைவர் விஜய்காந்த் காறி உமிழ்ந்த விவகாரம் இன்று சென்னை உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பொன்றின் போது கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வேளையில் பத்திரிகையாளர்களை காறி உமிழ்ந்து அவர் அவமதித்திருந்தார். இவ் விவகாரம் சமூக ஊடகங்களில் மிகப் பரவலான விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தது.
இது தொடர்பாக பதிவாகி இருந்த வழக்கு இன்று சென்னை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. வழக்கின் தீர்ப்பை அளித்த நீதிபதி ஆர். சுப்பையா, இவ்வழக்கை பொலிசார் கூடுதல் கவனத்தோடு கையாள வேண்டும் என்று கேட்டுள்ளார். குறித்த முறைப்பாட்டின் உண்மைத் தன்மைகளை அவர்கள் கண்டறிவதோடு, குற்றம் நிரூபிக்கப் படும் பட்சத்தில் விஜய்காந்த் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்காந்த் மீதான் இம் முறைப்பாட்டை தேவராஜன் என்பவர் செய்திருந்தார். இம்முறைப்பாட்டை இணையத்தின் ஊடாக கடந்த 28 ஆம் திகதி தான் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இணைய முறைப்பாட்டை செய்த பின்னர், அவசர தபால் மூலம் இதனை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாகவும் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கிகளும் மேற்கொள்ளப் படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விஜய்காந்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் தண்டனைகளும் அளிக்கப் படும்வரை தான் ஓயப் போவதில்லை என்று தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment