1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் எதிர்வரும் புதன்கிழமை 27.01.2016 அன்று பிரமாண்ட திறப்பு விழா நிகழ்வுடன் பாடசாலை பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
இலங்கையில் எந்தவொரு பாடசாலையிலும் இல்லாதவாறான நுழைவாயில் ஒன்றை எமது பாடசாலைக்கு புதிதாக நிர்மாணித்து கையளிப்பதில் Batch of 2002 (1999 G.C.E (O/L) & 2002 (G.C.E (A/L) மாணவர்கள் பெருமிதமடைகின்றனர்.
இந்நுழைவாயில் வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஆ.இளஞ்செழியன் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் T.J.பிரபாகரன் (நீதிபதி, கிளிநொச்சி), பு.அலெக்ஸ் ராஜா (நீதிபதி, மன்னார்), திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா), ஆ.சு.புஸ்பகுமார (அரச அதிபர், வவுனியா), கல்லூரி அதிபர் S.மரியநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
Batch of 2002 (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்)
No comments
Post a Comment