யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 9 யோசனைகளை முன்வைத்துள்ளது. எனினும் யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் சமஷ்டிக்கு இடமேயில்லை என ஸ்ரீலங்கா ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment