தமிழ் மக்கள் சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள். இலங்கையை ஒரு சமஷ்டி குடியரசாக்கி சுயநிர்ணயத்துடன் கூடிய தமிழர் தேசமாக வடக்கு, கிழக்கை அங்கீகரிக்கும் புதிய அரசமைப்பே கொண்டுவரப்பட வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை தமது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் இத்தீர்மானம் வெளியிடப்பட்டது.
இதில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஒரு பல் தேசிய, பல் கலாசார, பன் மொழி, பன் மதம் கொண்ட அரசாக இருக்க வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் எனப் பல்தேசிய சமூகங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கை தமிழர்களின் தாயகமாக சுயநிர்ண உரிமையுடன் அங்கீகரிக்ப்பட வேண்டும். சமஷ்டியின் இறைமையும் அதன் மக்கள் கூட்டத்தின் இறையும் உறுப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை ஒரு சமஷ்டி நாடாகும். முதலமைச்சருடன் கூடிய 14 பேரைக் கொண்ட அமைச்சரவை காணப்படும். தாம் ஆட்சியில் அதிர்ப்தி ஏற்படும் போது பிரிந்துச் செல்லக் கூடிய உரிமையை மூன்றாம் நாடொன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment