Latest News

January 19, 2016

ஊடகவியலாளர்களின் குறிப்புப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமை கண்டனத்திற்குரியது
by admin - 0

எம்­பி­லிப்­பிட்­டிய நீதிவான் நீதி­மன்­றத்­துடன் இணைப்பைக் கொண்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரால், நீதி­மன்ற சட்ட வரம்­புக்குள் இடம்­பெற்ற இளைஞர் ஒரு­வரின் சர்ச்­சைக்­கு­ரிய மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் குறித்து செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் குறிப்பு புத்­த­கங்கள் பல­வந்­த­மாக பறி­முதல் செய்­யப்­பட்­டமை குறித்து கடும் கண்­டனம் தெரி­விப்­ப­தாக இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் மேற்­படி சங்­கத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

மேற்­படி இளை­ஞரின் மரணம் உள்ளூர் சமூ­கத்­தினர் மத்­தியில் நீதிக்­கான கோஷத்தை எழுப்­பி­யி­ருந்­த­துடன் அந்த சம்­பவம் பொது­மக்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்ப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.
நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களின் போது நீதி­மன்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொண்­டமை மேலும் கவ­லையை தோற்­று­விக்க கார­ண­மா­கி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரத்தை இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் வேறாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் எடுத்துச் செல்­ல­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அந்த மாகாண நிரு­பர்கள் நீதி­மன்­றத்தில் தமது நியா­ய­பூர்­வ­மான உத்­தி­யோ­க­பூர்வ கட­மை­களை ஆற்றிக் கொண்­டி­ருந்­தனர். இதன்­போது எந்­த­வொரு கட்­டத்­திலும் தலைமை நீதி­ப­தியால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் நீதி­மன்ற அறையை விட்டு வெளி­யே­றவோ அன்றி குறிப்­புகள் எடுப்­பதை நிறுத்­தவோ புகைப்­படம் எடுப்­பதை தவிர்க்­கவோ கோரப்­ப­ட­வில்லை. அத்­துடன் அங்கு எவ்­வி­டத்­திலும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செயற்­பாட்­டுக்கு தடை விதிக்கும் அடை­யாளப் பல­கை­களும் காணப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் குறிப்­பிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரால் பறி­முதல் செய்­யப்­பட்ட குறிப்புப் புத்­த­கங்­களில் சில சம்­பந்­தப்­பட்ட பக்­கங்கள் கிழித்து அகற்­றப்­பட்ட பின் மீளக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

வளா­கத்­துக்குள் இடம்­பெற்ற இளை­ஞரின் மரணம் குறித்து பொலி­ஸாரின் நடத்தை சம்­பந்­த­மாக இடம்­பெற்ற நீதிவான் விசா­ர­ணையின் போது நீதி­மன்­றத்தில் இருந்த தனது மேல­தி­கா­ரி­களின் சட்­ட­வி­ரோ­த­மான உத்­த­ரவில் அந்த நீதி­மன்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் இந்த தவ­றான நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­தாக நாம் நம்­பு­கிறோம்.

இந்­நி­லையில் ஊடக சுதந்­தி­ரத்­தையும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளது தொழில் ரீதி­யான கட­மை­களை ஆற்­று­வ­தற்­கான அர­சியல் அமைப்பு ரீதி­யா­க­வுள்ள உரி­மை­க­ளையும் பொது­மக்­களின் பரந்த அக்­க­றைக்­கு­ரிய வழக்கு ஒன்று தொடர்­பான பொது விசாரணை சம்பந்தமாக தகவலறிவதற்கான பொதுமக்களது உரிமையும் நேரடியாக தாக்கும் வகையில் அமைந்த இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கோருகிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments